சாத்தான்குளம் நூலகத்திற்கு பீரோ, புத்தக அலமாரி வழங்கல்

சாத்தான்குளம், டிச. 18: சாத்தான்குளம் ராம.கோபாலகிருஷ்ணர் அரசு கிளை நூலகத்திற்கு தொழிலதிபர் ராஜரத்தினம் நினைவாக அவரது குடும்பத்தினர் 9 புத்தக அலமாரிகள், ஒரு பீரோ மற்றும் கிராமப்புற கிளை நூலகங்களுக்கு 7 புத்தக அலமாரிகளை வழங்கினர். இதையொட்டி சாத்தான்குளம் நூலகத்தில் நடந்த விழாவுக்கு மாவட்ட நூலகர் ரெங்கநாயகி தலைமை வகித்தார். அரிமா பட்டைய தலைவர் ஜெயப்பிரகாஷ், வாசகர் வட்டத் தலைவர் நடராசன் முன்னிலை வகித்தனர். நூலகர் சுப்பிரமணியன் வரவேற்றார்.

கொழுந்தட்டு கிளை நூலகர் அன்னாள்ஜெயந்தி வாழ்த்து கவிதை வாசித்தார். போட்டித் தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள நூல்களை பொறியாளர் வித்யாசாகர் வழங்கிய புத்தகங்கள் புதிய புத்தக அலமாரியில் வைக்கப்பட்டு புதிய அறை திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து புத்தக அலமாரி நன்கொடையாக வழங்கிய தொழிலதிபர் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் கிளை நூலகர்கள் நமச்சிவாயம், ராஜபிரபாவதி, சிவரஞ்சனா, எமரென்ஷியா, உமா, பாலமுருகன், ஜோசப்பின், கிருபை, சண்முகவேல், நூலக உதவியாளர் சுப்பிரமணியன், பணியாளர்கள் கோமதி, அங்கம்மாள், ஓய்வுபெற்ற ஆசிரியர் மகாபால்துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கிளை நூலகர் சித்திரைலிங்கம் நன்றி கூறினார்.

Related Stories: