×

களக்காடு, சுரண்டை உள்பட புதிய நகராட்சிகள் வார்டு மறுவரையறை இன்று வெளியீடு 20ம் தேதி ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம்

நெல்லை, டிச. 18: நெல்லை கலெக்டர் விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதிதாக உருவாக்கப்பட்ட, விரிவாக்கப்பட்ட, உயர்த்தப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் வரைவு வார்டு மறுவரையறை கருத்துருக்கள் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பார்வைக்கு இன்று (18ம் தேதி) வெளியிடப்படுகிறது. இந்த வரைவு வார்டு மறுவரையறை கருத்துருக்களின் மீது ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்கள் ஏதும் இருப்பின் அது குறித்த மனுக்கள் இன்று (18ம் தேதி) முதல் டிச.24ம் தேதிக்குள் உள்ளாட்சி அமைப்புகளின் மறு வரையறை அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். மறுவரையறை ஆணைய மண்டல அளவிலான கூட்டங்கள் வருகிற 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை மறுவரையறை ஆணையத்தால் 6 மண்டலங்களில் நடத்தப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மறுவரையறை ஆணையத்தின் மண்டல அளவிலான கூட்டம் 20ம் தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது. அப்போது நெல்லை மாவட்டத்தின் ஆட்சேபனைகள், கருத்துக்களும் மறுவரையறை ஆணையத்தால் கேட்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள புதிதாக உருவாக்கப்பட்ட, விரிவாக்கப்பட்ட களக்காடு நகராட்சியின் வரைவு வார்டு மறுவரையறை கருத்துருக்களின் மீது பொதுமக்கள், அரசியல் கட்சிகள் ஆட்சேபனை கருத்துக்கள் இருந்தால் 20ம் தேதி காலை 11 மணி முதல் 1 மணி வரை நடக்கும் மறுவரையறை ஆணைய மண்டல அளவிலான கூட்டத்தில் நேரடியாக, மனுவாக சமர்ப்பிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    தென்காசி: தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர்ராஜ் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட சுரண்டை  நகராட்சியின் வார்டு மறுவரையறை கருத்துருக்கள் 2011ம் ஆண்டு மக்கள்தொகை  கணக்கெடுப்பின் அடிப்படையில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின்  பார்வைக்கு இன்று 18ம் தேதி வெளியிடப்படுகிறது. வார்டு மறுவரையறை  கருத்துருக்களின் மீது ஆட்சேபணைகள் மற்றும் கருத்துக்கள் ஏதும் இருப்பின்  அது குறித்தான மனுக்கள் இன்று முதல் வரும் 24ம் தேதிக்குள் கீழ்க்காணும்  தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் மறுவரையறை அதிகாரியிடம்  சமர்ப்பிக்கலாம்.

 மறுவரையறை  ஆணையத்தின் மண்டல அளவிலான கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்  உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 20ம் தேதி காலை 11 மணிக்கு  நடைபெறவுள்ளது. இந்தக்கூட்டத்தில் தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சியின்  வார்டு மறுவரையறை கருத்துருக்கள், தொடர்புடைய ஆட்சேபணைகள் மறுவரையறை  ஆணையத்தால் கேட்கப்படவுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புதிதாக  உருவாக்கப்பட்ட சுரண்டை நகராட்சிக்கான வார்டு மறுவரையறை கருத்துருக்களின்  மீது பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆட்சேபனைகள், கருத்துக்கள்  ஏதும் இருப்பின் 20ம் தேதி காலை 11மணிக்கு நடைபெறும் மறுவரையறை ஆணைய மண்டல  அளவிலான கூட்டத்தில் நேரடியாகவோ, மனுவாகவோ சமர்ப்பித்திடலாம். இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார்.

Tags : Kalakkadu ,
× RELATED திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் வசந்த உற்சவம்