×

யுபிஎஸ்சி தேர்வுக்கான மாதிரி தேர்வுகள்

நெல்லை, டிச. 18: யுபிஎஸ்சி தேர்வுக்கான மாதிரி தேர்வுகள் நெல்லை மாவட்ட மைய நூலகத்தில் வரும் 20ம் தேதி முதல் நடக்கின்றன. யுபிஎஸ்சி, ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான முதன்மை தேர்வு, வரும் ஜன.7ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை நடக்கிறது. இதை முன்னிட்டு நெல்லை மாவட்ட மைய நூலகத்தில் வரும் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை இலவச மாதிரி தேர்வு நடக்கிறது. இத்தேர்வில் பங்குபெற விரும்புவோர் மாவட்ட மைய நூலகத்தை நாளை 19ம் தேதி மாலை 5 மணிக்குள் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். இத்தகவலை நெல்லை மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார்.

Tags : UPSC ,
× RELATED தனிப்பட்ட வெறுப்பால் அவமானப்படுத்திய...