×

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீர் சேமிக்க வேண்டும் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

அவனியாபுரம், டிச. 18: வைகை முல்லைபெரியாறு பாசன பாதுகாப்பு சங்க கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் தனியார் ஹாலில் நடைபெற்றது. தமிழக விவசாய சங்க மாநில தலைவர் பி.ஆர் பாண்டியன் தலைமை வகித்தார். இதில், 5 மாவட்டங்களை சேர்ந்த 15 விவசாய அமைப்புகள் பங்கேற்றன. இக்கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் சுதா, தேனி மாவட்ட விவசாய சங்க செயலாளர் பூபாலன் தமிழக பாரம்பரிய விவசாய சங்க மாநில தலைவர் ராவணன், மதுரை மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், தமிழக விவசாய சங்க செயலாளர் அருண் ,சிவகங்கை மாவட்ட விவசாய சங்க செயலாளர் ஆதிமூலம், மேலூர் பாசன விவசாயிகள் சங்கம் முத்து மீரான் உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த 15 விவசாய அமைப்பினர் கலந்து கொண்டனர்.

இதில், முல்லைப் பெரியாறு அணையில் கூடுதலாக நீரை சேர்க்கவும், 152 கனஅடி தண்ணீர் சேமிக்க வேண்டும்.மேலும் வைகையில் 30 அடிக்கு மேல் தேங்கி உள்ள கழிவுகளை நவீன எந்திரங்கள் மூலம் வெளியேற்றி கூடுதலாக நீர் சேர்க்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 27ம் தேதி மதுரையில் நடைபெறும் முல்லைப் பெரியாறு பாசன சங்க கூட்டத்தைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் குழு ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் சங்க குழுவினர் முதல்வரை சந்திக்க உள்ளோம் என தெரிவித்தனர்.

Tags : Farmers' Association ,Mullaiperiyaru dam ,
× RELATED மேகதாது அணையை தமிழகம் அனுமதிக்காது...