×

கூத்தாநல்லூர் நகராட்சி பகுதியில் அரசால் தடைசெய்த ரூ.75 ஆயிரம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

மன்னார்குடி, டிச. 18: சுற்றுச்சுழலை மாசுபடுத்தும், நிலத்தடி நீர் மட்டத்தை வெகுவாக பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை அரசு தடை விதித்து சட்டம் இயற்றி உள்ளது. இந்நிலையில், திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவின் பேரில் கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி தலைமையில் நகராட்சி பொறியாளர் ராஜகோபால், சுகாதார ஆய்வாளர் அருண்குமார், தூய்மை பாரத திட்ட மேற்பார்வையாளர் நிஷா ஆகியோர் அடங்கிய சிறப்பு கண்காணிப்பு குழுவினர் கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட நேருஜி ரோடு சின்ன பள்ளி தெரு லெட்சுமாங் குடி கடைத்தெரு ஆகிய இடங்களில் இயங்கும் ஓட்டல்கள், பெட்டிக்கடைகள் மற்றும் பலசரக்கு கடைகளில் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது, 15 கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ரூ.75 ஆயிரம் மதிப்பிலான 400 கிலோ எடையுள்ள நெகிழி பைகள், குவளைகள், உறிஞ்சு குழாய்கள், நெய்யாத பைகள் மற்றும் கரண்டி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அப்பொருட்களை நகராட்சி அதிகாரிகள் கைப் பற்றி தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பதுக்கி வைத்திருந்த நபர்களுக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி கூறுகையில், பொது மக் கள் கடைகளுக்கு செல்லும் போது துணிப்பை மற்றும் பாத்திரங்களை எடுத்து செல்ல வேண்டும், பிளாஸ்டிக் ஒழிப்பை ஒரு சமுதாய மாற்றத்திற்கான இயக்கமாக முன் எடுத்து செல்ல வேண்டும்.அரசின் உத்தரவை மீறி தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தாலோ அல்லது பயன் படுத்தினாலோ கடுமையான அபா ராதத்தோடு கூடிய நடவடிக்கை பாரபட்சமின்றி எடுக்கப்படும் என கூறினார்.

Tags : Koothanallur ,
× RELATED மதுபோதையில் தகராறு செய்ததால் மகனை அடித்துக்கொன்ற தந்தை