×

பொன்னராவதி பகுதியில் 4 பள்ளிகளில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

பொன்னமராவதி, டிச. 18: பொன்னமராவதி பகுதியில் 4 பள்ளிகளில் இல்லம் தேடி கல்வி கலைநிகழ்ச்சி நடந்தது. பொன்னமராவதி அருகே க.புதுப்பட்டி, கேசராபட்டியில் தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுக்கோட்டை அறிவியல் இயக்கம் சார்பில் மணிகண்டன் தலைமையிலான கலைபயண குழுவினரின் கலைநிகழ்ச்சி நடந்தது. ஊராட்சித்தலைவர் செல்வி தலைமை வகித்தார். க.புதுப்பட்டி, கேசராபட்டி தொடக்க பள்ளியில் கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் மற்றும் நாடகம் ஆகிய கலைகளை கொண்டு நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வியில் தன்னார்வலராக சேருவது பற்றியும், அதன் நோக்கம் பற்றியும் நடித்து காட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. நிகழ்ச்சியில் மாணவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டு பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் தலைமையாசிரியர் ஜெயஜோதி, ஆசிரியர்கள் மாரிமுத்து, ஆனந்த், கிராம கல்வி குழு தலைவர்கள் ராமச்சந்திரன், செல்லையா, துணைத்தலைவர் ரோஜாபானு கலிபுல்லா, வார்டு உறுப்பினர் மகபத்நிஸா, பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் ராமு, சந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல அஞ்சுபுளிப்பட்டி, மைலாப்பூர் பள்ளிகளிலும் நடைபெற்றது.

Tags : Educational Awareness Art Show ,Ponnaravathi ,
× RELATED புன்னம் பசுபதிபாளையம் பகுதியில்...