×

மட்டங்கால் கிராமத்தில் பழுதடைந்த கட்டிடத்தில் அங்கன்வாடி மையம்

கந்தர்வகோட்டை, டிச.18: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் மட்டங்கால் கிராமத்தில் உள்ள பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் மட்டங்கால் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மைய எண் 26 மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இதில் பயிலும் குழந்தைகள் அனைவரும் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.

குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி கட்டடத்தில் பாதி ஓடுகள் கீழே விழுந்து பாதி மேலே உள்ளது. ஓடுகள் எப்பொழுது கீழே விழும் என்பது தெரியாத நிலையில் இருப்பதால் குழந்தைகள் பாதுகாப்பு கருதி ஓடுகளை பிரித்து விட்டு சரி செய்து தரும்படி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Anganwadi center ,Mattangal village ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்