நாகை உழவர்சந்தை குத்தாலம் பேரூராட்சியில் மக்களிடம் குறைதீர்ப்பு முகாம்

குத்தாலம், டிச.18: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி 1வது வார்டு சத்யா நகரில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடந்தது.  இந்த நிகழ்வில் மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் கலந்துகொண்டு பொதுமக்களை நேரில் சந்தித்து பேசினார். மேலும் அவர்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். மனுக்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். மேலும் கன மழை பாதித்த இடங்கள் மற்றும் மழை நீர் தேங்கிய பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது குத்தாலம் ஒன்றியகுழு தலைவர் மகேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், திமுக பேரூர் செயலாளர் சம்சுதீன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஜம்பு கென்னடி, சூர்யா, பூர்விகா செந்தில், குத்தாலம் பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித், இளநிலை உதவியாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: