திருநள்ளாறு போலீசார் அதிரடி நடவடிக்கை நாகை மாவட்டத்தில் ரூ.6.68 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

நாகை, டிச.18: நாகை மாவட்டத்தில் 743 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 68 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தனியார் கல்லூரியில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா வரவேற்றார். கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன், கீழ்வேளூர் தொகுதி எம்எல்ஏ நாகைமாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு 743 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 68 லட்சத்து 90 ஆயிரத்து 807 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அமைச்சர் பேசியதாவது: 2033ம் ஆண்டிற்குள் தமிழகத்தில் குடிசை இல்லாத வீடுகளாக மாற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் முதல் கட்டமாக நாகையில் 10 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்காக ஆணை பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. நாகை நகர பகுதி வளர்ச்சிக்காக ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.10 கோடி மதிப்பில் நாகை கடற்கரை மேம்படுத்தப்படவுள்ளது. கீழ்வேளூர் தொகுதியில் வேளாண் அறிவியல் கல்லூரி அமைக்கப்படவுள்ளது. நாகை அரசு மருத்துவக்கல்லூரியில் நடப்பு ஆண்டில் 150 மாணவ, மாணவிகள் படிப்பதற்கு ஆவணம் செய்யப்பட்டுள்ளது.

வேதாரண்யம் பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்ய ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாகை நம்பியார் நகரில் கடல் அரிப்பை தடுக்க தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதற்கான பணிகளும் தொடங்கப்படவுள்ளது. தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாகை மாவட்டத்திற்கு தேவையான அனைத்தையும் செய்து வருகிறார். 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் தமிழக மக்களுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் உழைத்து கொண்டு இருக்கிறார். அவரது பணிகளை உலக நாடுகளே திரும்பி பார்க்கிறது. இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் பேசினார். முன்னாள் அமைச்சர் மதிவாணன், முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திட்ட இயக்குநர் பெரியசாமி நன்றி கூறினார்.

இதைத் தொடர்ந்து நாகை இஜிஎஸ்பிள்ளை கலை, அறிவியல் கல்லுரியில் கல்லூரியில் இளங்கலை வேதியியல் துறை மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகள் இரண்டு தவணை 100 சதவீதம் கொரோனோ தடுப்பூசி செலுத்தி இருப்பதை அறிந்து அமைச்சர் மெய்யநாதன் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.

Related Stories: