கிருஷ்ணராயபுரத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

கிருஷ்ணராயபுரம், டிச. 18: கிருஷ்ணராயபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. கிருஷ்ணராயபுரம் அரசு பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் நிறைமதி முன்னிலையில் நடைபெற்றது.

இம்முகாமில் பொது மருத்துவம் ஆண்கள் மற்றும் பெண்கள், காது மூக்கு தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், காசநோய் மற்றும் தொழு நோய் கண்டறிதல், சித்த மருத்துவம், கண் மருத்துவம், குழந்தைகள் நலம் மற்றும் தடுப்பூசி போன்றவை குறித்து பரிசோதனை செய்யப்பட்டன. இதில் கிருஷ்ணராயபுரம் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த 620 நபர்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. இம்முகாமில் கிருஷ்ணராயபுரம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ரவி ராஜா, பேரூர் செயலாளர் மகாலிங்கம், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: