×

நெய்வேலி தொகுதியில் ஆட்சியர் ஆய்வு

நெய்வேலி, டிச. 18:  நெய்வேலி சட்டமன்ற தொகுதி குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வடக்குத்து ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வடக்குத்து ஊராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள நுண்ணுயிர் உர தயாரிப்பு உற்பத்தி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வடக்குத்து ஊராட்சி அலுவலகத்தில் உள்ள கிராம ஊராட்சி பதிவேடுகளை ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து இந்திராநகர் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் குறைகளை கோட்டறிந்தார்.

 கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி பவன்குமார் ஜி கிரியப்பனவர், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் தணிகாசலம், உதவி செயற்பொறியாளர் குமுதா, குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதீஷ்குமார், சுப்பிரமணியன், உதவி பொறியாளர்கள் ரத்தினகுமார், நவீன்குமாரி, தமின்முனிஷா, வடக்குத்து ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை குப்புசாமி, துணை தலைவர் சடையப்பன், இந்திராநகர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர் உமா ராமதாஸ், ஊராட்சி செயலாளர்கள் எழிலரசன், கார்த்திகேயன், பணி மேற்பார்வையாளர் குணசேகரன், வட்டார ஒருங்கிணைப்பாளர் அனந்தராமன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Neyveli ,
× RELATED மந்த நிலையில் நடந்து வரும் சாலை...