வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சேத்தியாத்தோப்பு, டிச. 18: சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி பகுதியில் அமைந்துள்ளது வீராணம் ஏரி. மாவட்டத்தின் முக்கியமான நீர்த்தேக்கமாக விளங்கிவரும் இந்த ஏரியில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய விளைநிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. இந்நிலையில் தற்போது ஏரி பகுதிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியில் தற்போதைய நீர்மட்டம் 47 அடியாக உள்ளது. இதில் சென்னை குடிநீருக்காக 63 கனஅடியும், விவசாய பணிகளுக்காக 200 கனஅடியும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரிக்கு நீர்வரத்து 1030 கன அடியாக உள்ளது. இதனிடையே வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் இப்பகுதியில் சம்பா நடவு, உளுந்து விதைப்பு பணி துவங்க உள்ளதால் அதற்கு போதுமான நீரை வீராணம் ஏரியில்பாதுகாக்க வேண்டும் மற்றும் இப்பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கும் ஏரியின் நீர்மட்டத்தை குறையாமல் பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: