தொழிலதிபர் போல் நடித்து பைக் திருடிய டிப்-டாப் ஆசாமி

புதுச்சோி,  டிச. 18:   புதுச்சேரி, கொசப்பாளையம், சுப்பிரமணிய கோயில் வீதியைச் சேர்ந்தவர்  தமிழ்வாணன் (25). அண்ணா சாலையில் உள்ள பேக்கரியை ஒட்டி  டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த ஒரு டிப்-டாப்  ஆசாமி, தான் எதிர் பகுதியில் பிரபல தனியார் கம்பெனியின் உரிமையாளர் என  தமிழ்வாணனிடம் அறிமுகம் செய்துள்ளார். பின்னர் அவரிடம் ரூ.200ஐ  கொடுத்து தனது அலுவலகத்தில் பணியில் இருக்கிறவர்களுக்கு டீ கொடுத்து  அனுப்புமாறு கூறிய அந்த ஆசாமி, தனது கார் வெளியே சென்றிருப்பதாகவும் ஒரு  விபத்து உதவி தொடர்பாக அவசரமாக செல்ல வேண்டியிருப்பதால் பைக் தருமாறு  தமிழ்வாணனிடம் கேட்டுள்ளார். அவரும் அதை நம்பி பைக் சாவியை கொடுத்த  நிலையில் வண்டியை ஓட்டிச் சென்ற ஆசாமி மீண்டும் திரும்பி வரவேயில்ைல.  

இதையடுத்து அவர் கூறிய கம்பெனிக்குள் சென்று நடந்த சம்பவத்தைகூறி  விசாரித்தபோது, தங்களது உரிமையாளர் வேறுநபர் என அங்கிருந்த ஊழியர்கள்  தெரிவிக்கவே தமிழ்வாணன் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுபற்றி பெரியகடை  காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த பகுதியில் உள்ள  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது தமிழ்வாணனிடம் பைக்கை வாங்கிச் சென்ற  ஆசாமி குறித்து தனிப்படை விசாரணை மேற்கொண்டுள்ளது.

Related Stories: