நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

திருமுருகன்பூண்டி: திருப்பூர் மண்டல இயக்குனர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த ஏ.ஜே.முகம்மது சம்சுதீன் பதவி உயர்வு பெற்று திருமுருகன்பூண்டி 2ம் நிலை நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து நேற்று திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு வந்து பதவியேற்றார். இவர் நகராட்சியின் முதல் கமிஷனர் என்பது குறிப்பிடதக்கது. இவருக்கு முன்னாள் செயல் அலுவலர் ஆனந்தன், திமுக நகர செயலாளர் பாரதி, முன்னாள் செயலாளர் குமார், நகர துணைச் செயலாளர் மூர்த்தி,  மாவட்ட பிரதிநிதி வெங்கடாசலம், அதிமுக முன்னாள் பேரூராட்சி தலைவர் பழனிச்சாமி, நகர ஒன்றிய இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன், அம்மா பேரவை செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர் அய்யப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர துணை செயலாளர் பொன்னுசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம் ஒன்றிய குழு பாலசுப்பிரமணியம் மற்றும்  பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: