தமிழகம் மாளிகை பூங்காவில் அலங்கார செடிகளின் நாற்று உற்பத்தி தீவிரம்

ஊட்டி, டிச.17: ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகை பூங்கா நர்சரியிலும் அலங்கார செடிகளின் நாற்று உற்பத்தி துவங்கி நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இருப்பினும், கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில், இவ்விரு மாதமும் முதல் சீசனாக அனுசரிக்கப்படுகிறது. முதல் சீசனின் போது ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு இங்குள்ள தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. மேலும், பூங்கா முழுவதிலும் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும்.

அதில், பல வகைகளை கொண்ட பல வண்ண மலர்கள் பூத்துக் காணப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். தற்போது, முதல் சீசனுக்காக நாற்று உற்பத்தியில் அனைத்து பூங்கா ஊழியர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

தாவரவியல் பூங்காவில் 5 லட்சம் நாற்று உற்பத்தியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க தற்போது முதல் சீசனுக்காக தமிழகம் மாளிகையில் உள்ள நர்கரி மற்றும் கண்ணாடி மாளிகையிலும் நாற்று உற்பத்தி துவங்கி நடந்து வருகிறது.

பல வகையான அலங்கார செடிகள் மற்றும் மலர் செடிகள் உற்பத்தியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் மலர் நாற்றுக்கள் கோடை சீசனின் போது, தாவரவியல் பூங்கா மாடங்களில் வைக்க கொண்டு செல்லப்படும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.

Related Stories: