மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புதிய நிர்வாகிகள் தேர்வு

ஈரோடு,டிச.17: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மாவட்ட மாநாடு இரண்டாவது நாளாக நேற்றும் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஈரோடு பூந்துறை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற 2வது நாள் மாநாட்டை முன்னாள் எம்,எல்.ஏ.வும், கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினருமான எஸ். நூர்முகமது துவக்கி வைத்துப் பேசினார். மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் வாழ்த்திப் பேசினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.பி. பழனிசாமி, ஆர்.கோமதி, ஏ.எம். முனுசாமி,கே.ஆர். விஜயராகவன், எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.

இம்மாநாட்டில், ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் அம்பேத்கருக்கு சிலை அமைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டத் தலை நகரங்களிலும் அரசு மருத்துவமனைகள் உருவாக்க வேண்டும். விவசாயத்துக்கான உரத் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும். தாளவாடி, கடம்பூர், குத்தியாலத்தூர் பகுதி மலைவாழ் மக்களுக்கு எஸ்.டி.மலையாளி சாதிச் சான்று வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, கட்சியின் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டச் செயலாளராக ஆர்.ரகுராமன் தேர்வு செய்யப்பட்டார்.

மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களாக ப.மாரிமுத்து,ஜி.பழனிசாமி,பி.பழனிசாமி, சி.பரமசிவம், ஏ.எம்.முனுசாமி,ஆர்.கோமதி, கே.ஆர்.விஜயராகவன்,எஸ்.சுப்ரமணியன், சி.முருகேசன்,சி.துரைசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 35 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழுவும் தேர்வு செய்யப்பட்டது.கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி நிறைவுரையாற்றினார். வரவேற்பு குழு செயலாளர் பாலசுப்பிரமணி நன்றி கூறினார்.

Related Stories: