காங்., கட்சியில் அதிக உறுப்பினர்களை சேர்த்தவருக்கு தொழில் உபகரணங்கள்: எம்.எல்.ஏ., வழங்கல்

ஈரோடு,டிச.17: காங்கிரஸ் கட்சியில் அதிக உறுப்பினர்களை சேர்த்த நபருக்கு ரூ.30ஆயிரம் மதிப்புள்ள தொழில் உபகரணங்களை எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா வழங்கினார்.தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தேர்தலையொட்டி, ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் அதிக உறுப்பினர்களை சேர்த்த ஈரோடு சூரம்பட்டி சங்கு நகரை சேர்ந்த சதாம் உசேன் என்ற இளைஞரை, ஈரோடு கிழக்கு தொகுதி காங்., எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா பாரட்டினார்.

மேலும், அதிக உறுப்பினர்களை சேர்த்ததற்காக அந்த இளைஞர் புதிய தொழில் துவங்க ரூ.30ஆயிரம் மதிப்பிலான வெல்டிங், டிரில்லிங், கட்டிங் மிஷின் போன்றவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: