×

சுசீந்திரம் மார்கழி திருவிழா 2 டாஸ்மாக் கடைகள் மூடல்

நாகர்கோவில், டிச.17: குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: சுசீந்திரம் தாணுமாலயன்சுவாமி கோயில் வருடாந்திர மார்கழித் திருவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு 19.12.2021 அன்று தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003-ன் பிரிவு 12(2)-ன் கீழ் மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் படி சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரிக்க  சுசீந்திரம் தாணுமாலயன்சுவாமி கோயில்  பகுதியை சுற்றியுள்ள நல்லூர், பாலகிருஷ்ணன் புதூர் பகுதியில் உள்ள மதுபான கடைகளை குறிப்பிட்டுள்ள நாட்களில் அடைத்திட வேண்டும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Suchindram ,Markazhi Festival 2 ,Tasmag ,
× RELATED குப்பைகளை எரிப்பதால் அழியும் நிலையில் சாலையோர மரங்கள்