×

ஆறுமுகநேரியில் திருப்பாவை, திருவெம்பாவை பஜனை வீதிஉலா

ஆறுமுகநேரி ,டிச.17: ஆறுமுகநேரியில் திருப்பாவை, திருவெம்பாவை பஜனை வீதிஉலா 3 கோயில்களில் நேற்று தொடங்கியது. ஆறுமுகநேரியில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருப்பாவை, திருவெம்பாவை பஜனை வீதிஉலா நேற்று காலை கோயில்களில் தொடங்கியது. பொங்கல் திருநாளான தை மாதம் 1ம்தேதி வரை தினசரி காலையில் பஜனை வீதிஉலா நடக்கிறது. ஆறுமுகநேரி லட்சுமிமாநகரம் நடராஜர் ஆலயத்தில் நேற்று அதிகாலையில் நடராஜர், விநாயகர், மாணிக்கவாசகர் மற்றும் ஏனாதி நாயனாருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. அதனைதொடர்ந்து திருப்பாவை, திருவெம்பாவை வீதி பாராயண பஜனை உலா தொடங்கியது. பக்த ஜன சேவை செயலாளர் ராமச்சந்திரன், பூஜகர் வேலாயுதம் மற்றும் சிறுவர், சிறுமியர்கள் பங்கேற்றனர்.

ஆறுமுகநேரி விநாயகர் கோயில் தெரு சைவ சித்தாந்த சபையை சார்ந்த நடராஜர் ஆலயத்தில் மார்கழி மாத பஜனை உலா சபையின் தலைவர் சங்கரலிங்கம், செயலாளர் முருகன், பொருளாளர் கற்பகவிநாயகம் ஆகியோர் முன்னிலையில் தொடங்கியது. பேயன்விளை வடபத்திரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜையை தொடர்ந்து பஜனை வீதிஉலா நடந்தது. நிகழ்ச்சியில் கோயிலின் நிர்வாகி ஹரிதாஸ், முன்னாள் நிர்வாகி பரமகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர் நல கமிட்டி தலைவர் கோபிகிருஷ்ணன் பஜனையை தொடங்கி வைத்தார். பஜனை குழு அமைப்பாளர் ராஜமனி, பொன்மாடசாமி கோயில் நிர்வாகி ராஜேஷ், விநாயகர் கோயில் நிர்வாகி அரசகுரு, தர்மகுட்டி சாஸ்தா கோயில் நிர்வாகி கல்யாணகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Arumuganeri Thirupavai ,Thiruvembavai ,Bajna Veediula ,
× RELATED ஆறுமுகநேரியில் பஜனை வீதியுலா நிறைவு