×

குற்றாலம் அருவிப்பகுதிகளில் தென்காசி யூனியன் சேர்மன் ஆய்வு

தென்காசி, டிச. 17: குற்றாலம் மெயினருவியில் சீரமைப்பு பணிகள் குறித்து யூனியன் சேர்மன் சேக் அப்துல்லா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். தென்காசி யூனியன் சேர்மன்  ஷேக் அப்துல்லா தலைமையில் கடந்த நவ.24ம் தேதி ஒன்றியக்குழுவின் முதல் கூட்டம் நடந்தது. இதில் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிக்க  வேண்டும் என முதல்   தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து வரும் 20ம் தேதி முதல் குற்றால அருவிகளில் கட்டுப்பாடுகளுடன் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி வரும் 20ம் தேதி குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளும் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில் அருவிக்கரை பகுதிகளில் மக்கள் குளிக்க தேவையான வசதிகள் உள்ளனவா? மற்றும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்பு பணிகள் ஆகியன குறித்து  தென்காசி யூனியன் சேர்மன் ஷேக் அப்துல்லா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் துணை சேர்மன் கனகராஜ் முத்துபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வவிநாயகம், மல்லிகா, வினோதி, கலாநிதி, சுப்புலட்சுமி, ஆனந்தராஜ்  மற்றும் பிடிஓக்கள் பார்த்தசாரதி, குழந்தைமணி, திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் திவான் ஒலி,  துணை அமைப்பாளர் பெரோஸ்கான், பொறுப்புக்குழு உறுப்பினரும், ஆயிரப்பேரி முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான ராமகிருஷ்ணன், தென்காசி வட்டார காங்கிரஸ் தலைவர்  பெருமாள், ஆயிரப்பேரி முத்துவேல்,  கிளைச்செயலாளர்கள் வேல்ராஜ், ஆனந்தராஜ், ராமையா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : Tenkasi ,Union Chairman ,Courtallam Falls ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...