×

வேலாயுதம்பாளையத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம்

வேலாயுதம்பாளையம், டிச. 17: வலகம் சார்பில் பட்டா திருத்த சிறப்பு முகாம் புது குறுக்குப்பாளையத்தில் நடைபெற்றது. முகாமிற்கு புகழூர் தாசில்தார் மதிவாணன் தலைமை வகித்தார். வருவாய் ஆய்வாளர் ரஹ்மத்துல்லா, சர்வேயர் குணசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புஞ்சை புகழூர் தெற்கு விஏஓ ரமாதேவி வரவேற்றார். முகாமில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பட்டாவில் பெயர் மாற்றம், திருத்தம், கூட்டு பட்டாவில் இருந்து தனிப்பட்டா கோருதல், நத்தம் பட்டா கோருதல், கணினி சிட்டாவில் பெயர் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு மனுக்களை அளித்தனர். பின்னர் அதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் விஏஓக்கள் முருகேசன், ஜெயந்தி உட்பட வருவாய் துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Patta ,Correction Special Camp ,Velayuthampalayam ,
× RELATED இணையவழியில் நத்தம் பட்டா மாறுதல்...