கிருஷ்ணராயபுரத்தில் தேசிய வாக்காளர் தின வினாடி வினா போட்டி

கிருஷ்ணராயபுரம், டிச. 17: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணராயபுரம் வட்டார அளவிலான பள்ளிகளுக்கான வினாடி வினா போட்டிகள் கிருஷ்ணராயபுரத்தில் நடந்தது. கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வைரமூர்த்தி தலைமை வகித்தார். இதில் 7 பள்ளிகளிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டு போட்டிகள் நடந்தது. நடுவர்களாக ஆசிரியர்கள் மணிகண்டன், தனலட்சுமி குழந்தைவேல் ஆகியோர் செயல்பட்டனர். இதில் வெற்றி பெற்ற இரண்டு குழுக்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

Related Stories: