சர்வதேச அளவில் தங்கம் வென்ற சீர்காழி பெஸ்ட் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

சீர்காழி, டிச.17: சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச போட்டியில் தங்க பதக்கங்கள் வென்ற மாணவ மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நேபாளத்தில் சர்வதேச அளவில் நடந்து முடிந்த விளையாட்டு போட்டிகளில் தடகள போட்டியில் 100மீட்டர் ஓட்டத்தில் சீர்காழி அகணி கிராமத்தை சேர்ந்தவரும், எஸ்.எஸ்.என் அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவருமான மனோஜ்குமார் முதல்பரிசு வென்று தங்கபதக்கம் பெற்றார். இதேபோல் சீர்காழி யோகா மாணவி சுபானு தங்கபதக்கம் வென்றார். தங்கபதக்கம் வென்ற இருவருக்கும் பாராட்டு விழா பெஸ்ட் கல்விநிறுவனங்களின் தாளாளரும், எஸ்எஸ்என் அகாடமி செயலாளருமான ராஜ்கமல் தலைமையில் நடைபெற்றது. நிர்வாக அலுவலர் னிவாசன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சேர்ந்த ஆனந்த். சீனிவாசன். முருகவேல் ஆகியோர் முன்னிலை வகிதனர். சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் தங்கபதக்கம் வென்ற மாணவ, மாணவியை பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர்கள் முரளிதரன், செல்லத்துரை, செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முதல்வர் ராமலிங்கம் வரவேற்றார் உடற்கல்வி ஆசிரியர் ஸ்டாலின் நன்றி கூறினார்.

Related Stories: