×

காணொலியில் முதல்வர் துவக்கி வைத்தார் ஆண்டிமடம் அரசு இ-சேவை மையத்தில்

ஆண்டிமடம், டிச.17: ஆண்டிமடம் அரசு இ-சேவை மையத்தில் சர்வர் கோளாறு காரணமாக ஆதார்கார்டில் திருத்தம் செய்ய முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆதார் அட்டை பொதுமக்களுக்கு எந்த ஒரு அரசு சார்ந்த பணிகள் மற்றும் புதிய வங்கி கணக்கு தொடங்க அனைத்து பணிகளுக்கும் ஆதார் கார்டு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருந்து வருகிறது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஆதார் கார்டில் பெயர் திருத்தம், செல்போன் நம்பர் திருத்தம் வீட்டு முகவரி மாற்றம், திருத்தம், போட்டோ மாற்றம் செய்வது போன்ற பணிகளை ஆண்டிமடத்தில் உள்ள அரசு இ-சேவை மையத்தில் ஆதார் கார்டு திருத்த பணிகளை செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 3 மாதமாக அரசு இ-சேவை மையத்தில்சர்வர் சரிவர கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கைரேகை ஸ்கேன் செய்யும் இயந்திரம் பழுதடைந்ததாலும் ஆதார் கார்டு திருத்த பணிகள்செய்ய முடியவில்லை என பொதுமக்கள் கூறி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் ஜெயங்கொண்டம் அல்லது ஆண்டிமடம் அருகே உள்ள கடலூர் மாவட்டம் முஷ்ணத்தில் உள்ள அரசு இ-சேவை மையத்திற்கு சென்று வருகின்றனர். இதனால் வயதானவர்கள் மற்றும் பெண்கள் நீண்ட தூரம் சென்று தங்களது பணிகளை மேற்கொள்வதால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தங்களுக்கு வேண்டிய அரசு சார்ந்த பணிகள் மற்றும் புதிய வங்கி கணக்கு தொடங்க தாமதம் ஏற்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் உடனுக்குடன் பணிகளை மேற்கொள்ள முடியாமல் அலைக்கழிக்கப்பட்டு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆண்டிமடத்தில் உள்ள அரசு இ-சேவை மையத்தில் ஆதார் கார்டு திருத்தப் பணிகளை செய்துகொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Chief Minister ,Andimadam Government e-Service Center ,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...