கும்பகோணத்தில் 103வது நாளாக தொடரும் கொரோனா தடுப்பூசி முகாம்

கும்பகோணம்,டிச.17: கும்பகோணத்தில் முச்சந்தி சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் தொடர்ந்து 100 நாட்களையும் கடந்துள்ளது. இதில் 21 ஆயிரத்து 316 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கும்பகோணம் மடத்து தெரு-காமாட்சி ஜோசியர் தெரு சந்திப்பில் அமைந்திருக்கும் இந்த முச்சந்தி சிறப்பு தடுப்பூசி முகாமில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இங்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதியில் தொடர்ந்து இதுவரை 103வது நாளான நேற்று வரை 21 ஆயிரத்து 316 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று கோவாக்சின் 5 ஆயிரத்து 493 பேருக்கும், கோவிஷீல்டு 16 ஆயிரத்து 33 பேருக்கும், முதல் மற்றும் இரண்டாம் தவணையாக செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் பயனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக 50ம் நாளான கடந்த அக்டோபர் 3ம் தேதியன்று தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் 100 பேரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து டாக்டர் செல்வராஜ் மற்றும் டாக்டர் பார்த்தசாரதி முன்னிலையில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சுவர் கடிகாரம் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் 50 பேருக்கு கைக்கடிகாரமும் வழங்கப்பட்டது. முகாம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Related Stories: