×

மன்னார்குடி டாஸ்மாக் கடையில் மதுபாட்டில், பைக் திருட்டு: வழக்கில் 2 வாலிபர்கள் கைது

மன்னார்குடி, டிச. 16: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ரயில் நிலையம் அருகில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் கடந்த செப்டம்பர் மாதம் 20 ம் தேதி இரவு கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடி சென்றனர். மேலவாசல் கிராமத்தில் வசிக்கும் நீதிமன்ற பெண் ஊழியர் மாரியம்மாள் பைக்கை கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதியன்று மர்மநபர்கள் சிலர் திருடி சென்றனர்.மாசாணியம்மன் கோயில் அருகே உள்ள டீக்கடையில் வலங்கைமானை சேர்ந்த ரஞ்சித் என்பவர் பைக்கை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

இந்த மூன்று திருட்டு சம்பவங்கள் குறித்து பாதிக் கப்பட்ேடார் மன்னார்குடி நகரம் மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் தனித்தனியே புகார் அளித்திருந்தனர். மர்மநபர்களை கைது செய்ய எஸ்பி விஜயகுமார் உத்தரவிட்டிருந்தார். மன்னார்குடி டிஎஸ்பி பாலச்சந்தர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலை மையில், எஸ்ஐ மதி, குற்றப்பிரிவு எஸ்ஐ முருகானந்தம், உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், தனிப்படை போலீசார் மன்னார்குடி திருவாரூர் சாலையில் ஐவர் சமாதி பகுதியில் நேற்று முன்தினம் மதியம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த இரண்டு வாலிபர்களை மடக்கி மன்னார்குடி நகர காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தனர்.
அதில், பிடிபட்ட நபர்கள் வலங்கைமான் அருகே திருவோணமங்கலம் அடுத்த மொட்டையன் தோப்பு பகுதியை சேர்ந்த கவுண்டன் (எ) ராஜேஷ் (30), மன்னார்குடி அடுத்த குருவை மொழி கிராமத்தை சேர்ந்த பிரவின் குமார் (27) என தெரிய வந்தது.

மேலும், ரயில் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக்கில் ரூ 20 ஆயிரம் மதிப் பிலான மதுபான பாட்டில் களை திருடியது, மேலவாசல் மற்றும் மாசாணியம்மன் கோயில் உள்ளிட்ட இரண்டு இடங்களில் பைக்குகளை திருடியதை இருவரும் ஒப்புக்கொண்டனர். மேலும், கடந்த 2019ம் ஆண்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி அருகே நிறுத்தியிருந்த மன்னார்குடி அடுத்த செருமங்கலம் கிராமத்தை சேர்ந்த செல்வக் குமார் என்பவரின் பைக்கையும், கடந்த மே மாதம் 11ம் தேதியன்று திருவாரூர் வடக்கு கோபுரவாசல் பகுதியில் இருந்து சுப என்பவருக்கு சொந்தமான பைக்கையும் திருடியதை விசாரணையில் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த எஸ்ஐ மதி உள்ளிட்ட போலீசார் கவுண்டன் (எ) ராஜேஷ் (30), பிரவீன் குமார் (27) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 4 பைக்குகள் மற்றும் 20 ஆயிரம் மதிப்பில்லா பாட்டில்களுக்கான தொகையையும் கைப்பற்றினர். இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்து திருடு போன பொருட்களை மீட்ட தனிப்படை போலீசாரை டிஎஸ்பி பாலச்சந்தர் பாராட்டினார்.

Tags : Mannargudi Tasmac store ,
× RELATED பைக் மீது லாரி மோதி பெண் உயிரிழப்பு