×

போக்குவரத்து நெருக்கடியை குறைக்க ஒருவழி சாலையாக மாற்ற வேண்டும்: காளையார்கோவில் மக்கள் கோரிக்கை

காளையார்கோவில், டிச.6:  காளையர்கோவிலில் உள்ள மதுரை-தொண்டி நெடுஞ்சாலை 202ம் ஆண்டு  தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு இருவழிச் சாலையாக உள்ளது. தற்போது காளையார்கோவில் பகுதியில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகமாகிக் கொண்டே போவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. காளையார்கோவில் பஸ் நிலையத்தில் இருந்து  கல்லல், காரைக்குடி திரும்பும் வளைவு மற்றும் போலீஸ் ஸ்டேசன், பரமக்குடிக்கு திரும்பும் வளைவுகளில்  அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகின்றன.

விபத்துகளை தடுப்பதற்காக காளையார்கோவில் துணை மின் நிலையத்தில் இருந்து சூசையப்பர்பட்டிணம் விளக்கு வரையிலும் உள்ள இருவழிச் சாலையை ஒருவழிச் சாலையாக மாற்ற வேண்டும். போலீஸ் ஸ்டேசன், பரமக்குடி மற்றும் கல்லல், காரைக்குடிக்கு திரும்பும் வளைவுகளில் ரவுண்டனா அமைத்து காலை மற்றும் இரவு நேரங்களில் டிராபிக் போலீசார் மூலம் வாகனங்களின் வேகங்களை கட்டுப்படுத்த  நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    

Tags : Kaliningrad ,
× RELATED காளையார்கோவில் தாலுகா அலுவலகத்திற்கு பஸ் வசதி வேண்டும்