நாகை உழவர்சந்தை அத்திப்புலியூர் ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி

கீழ்வேளூர், டிச.16: அத்திப்புலியூர் ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி குறித்து மாவட்ட தேர்தல் பார்வையாளர் பாஸ்கரன் வீடு வீடாக சென்று நேரில் ஆய்வு செய்தார். நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா அத்திப்புலியூர் ஊராட்சி, நீலப்பாடி கிராமத்தில் தமிழ்நாடு கடல்சார் வாரிய துணை தலைவரும் நாகை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான பாஸ்கரன், நீலப்பாடி மெயின் சாலையில் உள்ள வீடுகளில் வாக்களார் பட்டியலில் சேர்த்தல் மற்றும் நீக்குதல் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட படிவங்களை சரி பார்த்து மேலும் விண்ணப்பதாரர்களால் இணைக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை குறித்தும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது கீழ்வேளூர் தாசில்தார் அமுதா, தேர்தல் துணை தாசில்தார் துர்காபாய். வருவாய் ஆய்வாளர் பிரபா தேவி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: