சீர்காழி அருகே வள்ளுவகுடியில் விஏஓ பணியிட மாற்றம் கண்டித்து சாலை மறியல்

சீர்காழி, டிச.16: சீர்காழி அருகே வள்ளுவ குடி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக திம்மராசு பணிபுரிந்து வந்தார். இவர்மீது நிவாரணம் வழங்கியதில் குற்றச்சாட்டு எழுந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக விஏஓ திம்மராசு தரங்கம்பாடி தாலுகாவிற்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் வள்ளுவகுடி கிராமத்தில் பணிபுரிந்த விஏஓ திம்மராசு வேறு இடத்திற்கு பணிமாற்றம் செய்ததை கண்டித்தும், விஏஓ எந்த முறை கேட்டிலும் ஈடுபடவில்லை எனக் கூறியும் மீண்டும் வள்ளுவக்குடி கிராம நிர்வாக அலுவலராக பணியில் திம்மராசு பணியமர்த்த வலியுறுத்தியும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வள்ளுவகுடி மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த தாசில்தார் சண்முகம், சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியலால் சீர்காழி-கொண்டல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: