×

அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரத்தில் உதவித்தொகை உயர்த்தி வழங்ககோரி போராட்டம்

அரவக்குறிச்சி, டிச. 16: அரவக்குறிச்சியில் தாலுகா அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம் நடைபெற்றது. நான்கு பெண்கள் உள்ளிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். அரவக்குறிச்சியில் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். இப்போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதந்திர உதவித்தொகையை 1000 ரூபாயிலிருந்து 3000 ஆகவும், கடும் ஊனமுற்றோர்க்கு 1500 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது. மாவட்ட செயலாளர் ராஜாமுகமது, ஒன்றியத்தலைவர் ஆறுமுகம், துணைச்செயலாளர் தங்கபாண்டியன் மற்றும் சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறியல் இதில் 4 பெண்கள் உள்ளிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டு பேரூராட்சி சமுதாய கூடத்தில் தங்கவைக்கப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். கிருஷ்ணராயபுரம்: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட தலைவர் கண்ணகி தலைமையில் மாநில செயலாளர் ஜீவா முன்னிலையில் கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ராஜு, தர்மலிங்கம், கண்ணதாசன், நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கத்திரிக்காய்    ரூ.80
வெண்டைக்காய்     70
தக்காளி     80
புடலங்காய்     50
பீர்க்கங்காய்     75
அவரைக்காய்     80
பாகற்காய்     65
கொத்தவரங்காய்     40
முள்ளங்கி     40
பரங்கிக்காய்     15
முருங்கைக்காய்     70
வாழைக்காய்     26
வெங்காயம்     45
வெங்காயம் பெல்லாரி     52
பச்சைமிளகாய்    ரூ.30
கொத்தமல்லி     55
புதினா     40
சேனைக்கிழங்கு     30
கருணைகிழங்கு     50
சேப்பங்கிழங்கு     40
எலுமிச்சைபழம்     70
பூவன் பழம்     40
ரஸ்தாளி     50
கேரட்     58
முட்டைகோஸ்     30
பீட்ருட்     50
உருளைக்கிழங்கு     40
இஞ்சி     50
பெட்ரோல் லிட்டர்: ரூ.101.70
1 கிராம் .... ரூ.4,620
1 பவுன் .... ரூ.36,960
டீசல் லிட்டர்: ரூ.91.76
கரூர்

Tags : Aravakurichi ,Krishnarayapuram ,
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...