அரவக்குறிச்சியை அடுத்த ஆண்டிபட்டிகோட்டை அருகே கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்

அரவக்குறிச்சி. டிச. 16: அரவக்குறிச்சியை அடுத்த ஆண்டிபட்டிகோட்டை அருகே கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. கரூரை சேர்ந்த 7 பேர் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு காரில் கரூர் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்த பிரகாஷ் (31) என்பவர் ஓட்டினார். அரவக்குறிச்சியை அடுத்த ஆண்டிபட்டிகோட்டை அருகே திண்டுக்கல் கரூர் சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த ஏழு பேரில் நீலவேணி என்பவருக்கு மட்டும் உள் காயம் ஏற்பட்டதால் டோல் பிளாசா ஆம்புலன்ஸ் மூலம் கரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மற்ற யாருக்கும் காயம் எதுவும் இல்லை. இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: