ராமநாதபுரத்தில் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் அறிவியல் கண்காட்சி போட்டி நடந்தது. ராமநாதபுரம், டிச.6: ராமநாதபுரத்தில் நடந்த குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 75 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 29வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்டத் தலைவர் அய்யாச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வரவேற்றார். நேஷனல் அகடாமி மெட்ரிக் பள்ளி முதல்வர் ராஜமுத்து, அறிவியல் இயக்க மாநில செயலாளர்கள் பாலகிருஷ்ணன், தியாகராஜன் பள்ளி துணை ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட செயலாளர் காந்தி ஆகியோர் பேசினர்.