×

ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் 4,460 கால்நடைகளுக்கு காணை ேநாய் தடுப்பூசி

சின்னாளபட்டி, டிச. 6: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குட்டத்துப்பட்டியில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் காணை நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. கலெக்டர் விசாகன் தலைமை வகிக்க, கால்நடைத்துறை இணை இயக்குநர் மருத்துவர் முருகன், உதவி இயக்குநர்கள் விஜயக்குமார், ஆறுமுகராஜ் முன்னிலை வகித்தனர். கால்நடை உதவி மருத்துவர் சைராபானு வரவேற்றார். கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முகாமை துவக்கி வைத்து பேசுகையில், ‘தற்போது மழை காலமாக இருப்பதால் கால்நடைகளை நோயிலிருந்து  காப்பாற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கிராமந்தோறும் முகாம்களை நடத்தி கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் மட்டும் 4 ஆயிரத்து 460 கால்நடைகளுக்கு  தடுப்பூசி போடப்படுகிறது’என்றார். இதில் ஒன்றிய தலைவர் சிவகுருசாமி, திமுக கிழக்கு மாவட்ட துணை செயலாளர் தண்டபானி,  முன்னாள் ஒன்றிய தலைவர் சத்தியமூர்த்தி, ஒன்றிய துணை தலைவர் ராஜேஸ்வரி தமிழ்ச்செல்வன், கன்னிவாடி பேரூர் கழக செயலாளர் சண்முகம், ஒன்றிய குழு  உறுப்பினர்கள் சுமதி, திருப்பதி, நிர்வாகிகள் உதயகுமார், ரவி, கால்நடை ஆய்வாளர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Retiarchatram Union ,
× RELATED ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில்...