நத்தம், டிச. 6:நத்தம் அருகே பூதகுடியில் இல்லம் தேடி கல்வி திட்ட துவக்க விழா நடந்தது. ஊராட்சி தலைவர் பரமசிவம் தலைமை வகிக்க, வட்டார கல்வி அலுவலர்கள் நல்லுச்சாமி, முத்தம்மாள் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் பாலசுப்பிரமணி வரவேற்றார். விழாவில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் நோக்கங்கள் பற்றி எடுத்து கூறப்பட்டது. தன்னார்வலர்கள் அபிநயா, ரம்யா, கௌசல்யா உறுதிமொழி எடுத்து கொண்டனர். ஆசிரியர் சந்தியாகப்பர் நன்றி கூறினார்.