×

டெங்கு காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

கோவை, டிச. 16: கோவை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் உள்ள முதியோர் இல்லங்களில் டெங்கு காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக முதியோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அதிகாரிகள் அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
கோவை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் 30 முதியோர் இல்லங்கள் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் இல்லங்களில் 1200க்கும் மேற்பட்ட முதியோர்கள் தங்கியுள்ளனர். மகன், மகள், உறவினர்கள் போன்றவர்களால் கைவிடப்பட்டவர்களும்,

தனிமையில் வசித்தவர்களும் என ஆதரவற்ற முதியோர்கள்தான் இந்த இல்லங்களில் உள்ளனர். இவர்களுக்கு மருத்துவ உதவிகள் அளித்தும், தங்க இடம் மற்றும் உணவுகள் ஆகியவை தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் அளிக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதியோர்களை கண்காணிக்கும் விதமாக மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் உள்ள 30 முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர்களுக்கு டெங்கு காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுக்கு வெப்ப அளவு பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘முதியோர் இல்லங்களுக்கு நேரடியாக சென்று முதியோர்களிடம் விழிப்புணர்வை அளித்து வருகிறோம். காய்ச்சல், சளி இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளோம். மேலும் முதியோர் இல்ல ஊழியர்களிடம் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும். மழை நீர் கட்டிடங்கள் மேல் உள்ளதா? என கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். தொடர்ந்து முதியோர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்’’ என்றனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...