அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டி, டிச. 16:  அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி முடுக்குமீண்டான்பட்டி கிராம மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார். கோவில்பட்டி அருகே உள்ள முடுக்குமீண்டான்பட்டி எஸ்.டி.ஏ. சர்ச் தெருவில் வசிக்கும் ஆதிதிராவிடர் சமுதாய மக்கள், கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

பின்னர் அவர்கள், கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்: முடுக்குமீண்டான்பட்டி பஞ்சாயத்து எஸ்.டி.ஏ. சர்ச் தெருவில் 200க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் சமுதாயத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் சிறுவர் பூங்கா மற்றும் விளையாட்டு திடல் அமைத்து தர வேண்டும். தெருக்களில் பேவர் பிளாக் கல் அமைக்க வேண்டும். வாறுகால் வசதி செய்து தருவதோடு, பழுதடைந்த தெரு விளக்குகளை மாற்றி முறையாக எரிய விட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும். தவறும்பட்சத்தில் ஆதிதிராவிடர் வசிக்கும் அனைத்து வீடுகளிலும் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: