×

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலையில் பள்ளி மாணவர்களுக்கு கட்டாய ஆலோசனை வகுப்பு: கலெக்டர் பேச்சு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிமுதல் 4 மணிவரை கட்டாயமாக ஒருமணி நேர ஆலோசனை வகுப்பு நடத்த வேண்டும் என கலெக்டர் ஆர்த்தி தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில், குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தலை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, கலெக்டர் ஆர்த்தி தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் நந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் ஆர்த்தி, பள்ளி மாணவர்களுக்கு அறிவுரைகளையும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறையின்போது புகார் தெரிவிக்க வேண்டிய சைல்டு லைன் எண் 1098, பள்ளி குழந்தைகளுக்கான தகவல் எண் 1441 குறித்து பேசினார். தொடர்ந்து, அனைத்து வகை பள்ளிகளிலும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 3 மணி முதல் 4 மணிவரை அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயம் ஆலோசனை வகுப்பு நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

Tags :
× RELATED செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம்...