வத்திராயிருப்பில் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

வத்திராயிருப்பு, டிச.15: வத்திராயிருப்பு அக்ராஹாரம் நடுத்தெருவில் சேதுநாராயணபெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று காலை 6.30 மணியளவில் கார்த்திகை வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் திறப்பின்போது சேதுநாராயண பெருமாள் சீதேவி, பூதேவியுடன் வலம் வந்தார். சொர்க்கவாசல் திறப்பின்போது கூடியிருந்த பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கினர். பின்னா் சேதுநாராயண பெருமாள் சீதேவி, பூதேவியை சப்பரத்தில் வைத்து அக்ரஹாரம் நடுத்தெரு வழியாக சென்று தெற்கு அக்ரஹாரம் தலகாணி தெரு, வடக்கு அக்ரஹாரம் வழியாக வந்து மீண்டும் கோயிலை வந்தடைந்தார்.

சொர்க்கவாசல் திறப்பிற்கு முன்னதாக நேற்று அதிகாலை சாமிகளுக்கு பால்,பழம்,பன்னீா்,இளநீா் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சொர்க்கவாசல் திறப்பு வரை பூஜைகள் நடைபெற்றது. பெண்கள் பக்தி பாடல்களை பாடினா். 19 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதேசி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: