×

ஓய்வூதியர் சங்க பேரவை கூட்டம்

சிவகங்கை, டிச.15: சிவகங்கையில் தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதிய சங்கத்தின் 6வது மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் வடிவேலு தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி சங்க கொடியேற்றினார். ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார். மாநில துணைத் தலைவர் குப்பன் நிறைவுரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் மெய்யப்பன்,

மாவட்ட செயலாளர் செல்லமுத்து, மாவட்ட பொருளாளர் அழகேசன், தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் ஓய்வூதிய சங்க மாவட்டத் தலைவர் முத்துச்சாமி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Pensioners' Association ,
× RELATED ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம்