×

ஐடிஐ மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

சிவகங்கை, டிச.15: சிவகங்கை அருகே முத்துப்பட்டி அரசு ஐடிஐ.யில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐடிஐ முதல்வர் முருகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: முத்துப்பட்டி அரசு ஐடிஐயில் 2021ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இணைய வழியில் நடைபெற்றது. தற்போது ஐடிஐயில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் 31.12.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர்(கோபா), வெல்டர், ஆடை தயாரித்தல் ஆகிய பிரிவுகளில் சேரலாம்.

நேரடி சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் 2 நகல், கலர் போட்டோ 5 கொண்டு வர வேண்டும். ஐடிஐயில் சேரும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள், காலணிகள், இலவச பஸ்பாஸ், உதவித்தொகை மாதம் ரூ.750 ஆகியவை வழங்கப்படும்.  கூடுதல் விவரம் அறிய 9944887754, 9976208265, 9942099481 என்ற செல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : ITI ,
× RELATED வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ₹1.83 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது