அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார் ரூ.35.8 லட்சத்தில் ஆழ்துளை கிணறு, மின் விளக்குகள்

திருச்சி, டிச.15: நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புத்தூரில் மந்தை மற்றும் தெற்கு முத்துராஜா வீதி ஆகிய 2 இடங்களில் ரூ.7.35 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றுடன் கூடிய சின்டெக்ஸ் டேங்குகளை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட கிராப்பட்டி பகுதியில், பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று, மதுரை சாலையில், ஜங்ஷன் மேம்பாலம் முதல், கிராப்பட்டி மேம்பாலம் வரை, ரூ.28.45 லட்சம் மதிப்பில் 64 விளக்குகளுடன் அமைக்கப்பட்ட 32 மின்கம்பங்களின் பயன்பாட்டினை மக்களுக்கு வழங்கி மின்னொளி வசதியினை அமைச்சர் தொடங்கி வைத்தார். இதில் திருச்சி கலெக்டர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான், நகரப் பொறியாளர் அமுதவள்ளி, திமுக மாநகர செயலாளர் அன்பழகன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: