×

வரி விளம்பரங்கள் சித்த மருத்துவ முகாம்

திருத்துறைப்பூண்டி, டிச. 15: திருத்துறைப்பூண்டி அருகே பள்ளங்கோயில் புனித ஜான் டி பிரிட்டோ அரசு உதவி பெறும் உயர் நிலைப் பள்ளியில் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு சார்பில் சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
பள்ளி தாளாளர் ஜான்பிரிட்டோ தலைமை வகித்தார். நிர்வாகி ரீகன்ஜெயக்குமார் வரவேற்றார்,அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் அனுஷா மாணவர்களுக்கு டெங்கு மற்றும் கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும்அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கி கூறி மாணவ,மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். முடிவில் தலைமையாசிரியர் ஜேம்ஸ்ராஜ் நன்றி கூறினார்.

Tags : Ads Paranoid Medical Camp ,
× RELATED திருச்சியில் இருந்து கரூர் வரை...