×

கந்தர்வகோட்டை பகுதியில் விதை கடலை விற்பனை விறுவிறுப்பு

கந்தர்வகோட்டை, டிச.15:கந்தர்வகோட்டை பகுதியில் விதை கடலை விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பகுதியில் கார்த்திகை மாதம் கடலை விதைப்பதற்கு ஏற்றது என்பதால் விதை கடலை விற்பனை விறுவிறுப்பாக உள்ளது. இப்பகுதியில் தற்சமயம் பெய்த பருவ மழையின் காரணமாக நீர் நிலைகள் நிறைந்துள்ளது. இதனைப் பயன்படுத்தி விவசாயிகள் கார்த்திகைப் பட்டம் கடலை விதைப்பதற்கு தங்களது நிலங்களை தயார் செய்து வியாபாரிகளிடமிருந்து விதை கடலை வாங்கி செல்கிறார்கள். விராலிப்பட்டி சேர்ந்த பட்டதாரி விவசாயியான ராமகிருஷ்ணன் கூறியதாவது: 37 கிலோ எடை கொண்ட விதை கடலை முட்டையின் விலை 3700 ரூபாய் எனவும், ஒரு மூட்டை கடலையில் இருந்து கிடைக்கும் விதை கடலை பருப்பு 25 கிலோ வரை கிடைக்கும் எனவும், இந்த விதையை கொண்டு அரை ஏக்கர் நிலப்பரப்பில் விதைக்கலாம் என தெரிவித்தார். விவசாயிகளிடமிருந்து விளைந்த கடலையை அரசே கொள்முதல் செய்து எண்ணெய் பிழிந்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்யலாம் என கூறினார். பாமாயில் இறக்குமதியை குறைந்து கொண்டு நமது நாட்டின் விவசாயிகளின் நலன் காக்க வேண்டும் எனவும், இவ்வாறு செய்யும் பட்சத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் எனவும், உள்நாட்டில் உற்பத்தி செய்யும் எண்ணெய் வித்துக்கள் பயன் நமது மக்களையே சேரும் எனவும்,தொழில் வளர்ச்சி அடையும் எனவும் தெரிவித்தார்.

Tags : Kandarwakottai ,
× RELATED கந்தர்வகோட்டை பகுதியில் காய்கறி செடிகள் அமோக விற்பனை