சாலை விபத்தில் எஸ்பி அலுவலக இளநிலை உதவியாளர் பலி

ஜெயங்கொண்டம், டிச.15: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுத நகரைச் சேர்ந்த சாமுவேல் மகன் அலெக்சாண்டர்(46).இவர் அரியலூர் எஸ் பி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல அரியலூர் எஸ்பி அலுவலகத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது உடையார்பாளையம் இடையார் பிரிவு சாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்த அலெக்ஸ்சாண்டர் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அலெக்சாண்டரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அலெக்சாண்டர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: