×

மர்ம நபர்களுக்கு வலை பெரம்பலூரில் 983 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன், நலத்திட்ட உதவிகள் அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் வழங்கினார்

பெரம்பலூர்,டிச.15: பெரம்பலூரில் மகளிர் திட்டத்தின் சார்பில் 983 மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 12,834 பயனாளிகளுக்கு ரூ.36.02 கோடி மதிப்பில் கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வை காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களால் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில், பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் குன்னம் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு, 983 சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 12,834 உறுப்பினர்களுக்கு ரூ.36.02 கோடி மதிப்பிலான கடன் உதவிகள், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் ராஜமோகன், ஒன்றியக்குழு தலைவர்கள் (பெரம்பலூர்) மீனா அண்ணாதுரை, (வேப்பந்தட்டை) ராமலிங்கம், (வேப்பூர்) பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் தழுதாழை பாஸ்கர், டாக்டர் கருணாநிதி, மகாதேவி ஜெயபால், சோமு.மதியழகன் மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் கமல்ராஜ், மகேசன், ரமேஷ் பாபு, செல்வகுமார், ஜூலியஸ் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Bank ,Loans and Welfare ,Assistance ,SS Sivasankar ,Help Groups ,Perambalur ,
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...