சீர்காழியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 39 பேர் கைது

சீர்காழி, டிச.15: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஊனமுற்றவர்கள் மற்றும் கடும் ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரி நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். நகர செயலாளர் சுரேஷ்குமார் வைத்தீஸ்வரன் கோயில் செயலாளர் முருகன், நகர தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உட்பட 39 மாற்றுத்திறனாளிகளை சீர்காழி போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யம்: வேதாரண்யம் ஆர்டிஓ அலுவலகம் முன்பு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கதுணைத் தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் வேதாரண்யம் ஒன்றிய தலைவர் சண்முகம், இணைச் செயலாளர் பாலமுருகன், மாவட்டக்குழு ராஜேந்திரன், தலைஞாயிறு ஒன்றிய கிளைச் செயலாளர்கள் முருகையன், நாகேந்திரன், ஒன்றியத் தலைவர் குப்புசாமி, மாராச்சேரி கிளைச் செயலாளா் வெள்ளிநாதன், நாகக்குடையான் கிளைத் தலைவர் ஐயப்பன் உள்ளிட்ட ஏரளமானவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் வேதாரண்யம் ஆர்டிஓ துரைமுருகனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Related Stories: