கரூர் உழவர்சந்தை அரவக்குறிச்சி பகுதியில் தொடர் மழை எதிரொலி குடை பழுது பார்க்கும் தொழிலாளருக்கு கிராக்கி

அரவக்குறிச்சி, டிச. 15: தொடர் மழையின் காரணமாக அரவக்குறிச்சி பகுதியில் குடை பழுது பார்ப்பவர்கள் அதிக அளவில் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அரவக்குறிச்சி ஒன்றிய பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகின்றது. தினசரி மேக மூட்டமாகவே கணப்படுகின்றது. வெயிலை காண்பதே அரிதாக உள்ளது. அரவக்குறிச்சி ஒன்றிய பகுதி முழுவதும் குளிர் பிரதேசம் போல் கடும் குளிர் அடிக்கின்றது. பொதுமக்கள் உல்லன், சொட்டர் அணிந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இரவு முழுவதும் மிதமான மழை பெய்து கொண்டே இருப்பதால் அதிகாலை பால்காரர் உள்ளிட்ட வேலைக்குச் செல்பவர்களின் இயல்பு வாழ்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது. பகலிலும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் அன்றாட வழக்கமான பணிகளில் ஈடுபட முடியாமல் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக மழையிலிருந்து தப்பித்த அத்தியாவசியப் பணிகளுக்கு குடையுடன் வெளியே செல்ல வேண்டியுள்ளது. இதனால் குடையின் பயன்பாடு அதிகரித்துள்ளது. வீடுகளில் இதுவரை உபயோகப்படுத்தாமல் தொங்க விட்டிருந்த குடைகளை தூசி தட்டி எடுக்கின்றனர். ரொம்ப நாள் உபயோகப்படுத்தாததால் பழுதடைந்துள்ளன.

இதனால் அரவக்குறிச்சி பகுதியில் குடை பழுது பார்ப்பவர்கள் அதிக அளவில் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வீடு வீடாகச் சென்று கேட்டு குடைகளை பழுது பார்த்து தருகின்றனர். ஒரு புதிய குடை ரூ.150 முதல் ரூ.200 வரை விற்கும் நிலையில் பழுது பார்க்க ரூ.20 முதல் ரூ.30 வரை மட்டுமே கட்டணமாக வசூலிக்கின்றனர். இதனால் தினசரி கணிசமான அளவு வருமானம் வருவதாக குடை பழது பார்ப்பவர்கள் கூறுகின்றனர்.

Related Stories: