×

தாளமுத்துநகர் பள்ளியில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி, டிச. 15: தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆர்.சி பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடந்தது.  தூத்துக்குடி,  தாளமுத்துநகர் ஆர்சி பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி என்ற தலைப்பில்  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளித் தலைமை ஆசிரியர் வின்சென்ட் தலைமை  வகித்தார். ஊரக வட்டார வளமைய  ஆசிரிய பயிற்றுநர் சார்லஸ் முன்னிலை  வகித்தார். இதையொட்டி தமிழன்டா கலைக்குழு சார்பில் விழிப்புணர்வு கலை  நிகழ்ச்சிகள் நடந்தன. தமிழன்டா கலைக்குழுவின் தலைவர் ஜெகஜீவன் மாணவர்களுக்கு பரிசு வழங்கி  சிறப்புரை ஆற்றினார். இதேபோல் ராஜபாளையம், லூர்தம்மாள்புரம், சங்குகுளி காலனி  உட்பட பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.

Tags : Thalamuthunagar School ,
× RELATED திருச்சியில் இருந்து கரூர் வரை...