×

செட்டியாபத்து ஊராட்சி பகுதியில் மியாவாக்கி காடு வளர்ப்புத்திட்ட பணி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு

உடன்குடி, டிச. 15: உடன்குடி யூனியன், செட்டியாபத்து ஊராட்சியில் உருவாக்கப்பட்டு வரும் மியாவாக்கி  காடு வளர்ப்புத் திட்டப்பணிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வுநடத்தியதோடு மரம் வளர்ப்புக்கு பயன்படும் தண்ணீர் தொட்டிகளை திறந்து வைத்தார். குறைந்த நிலத்தில் அடர் காடுகளை உருவாக்கும் மியாவாக்கி காடு வளர்ப்புத்திட்ட பணிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வுசெய்தார். மேலும் இதற்காக குறைந்த அளவிலான நீர் மேலாண் பணிகளை துவக்கிவைத்து ஆய்வுசெய்தார். அத்துடன் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு பயன்படும் வகையில் அமைக்கப்பட்ட இரு தண்ணீர் தொட்டிகளை திறந்துவைத்தார். நிகழ்ச்சிகளுக்கு செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை வகித்தனர்.  திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், பிடிஓ பொற்செழியன், மண்டல துணை பிடிஓ மலர்மதி நிர்மலா, உடன்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் அஸ்ஸாப் கல்லாசி முன்னிலை வகித்தனர். ஜப்பான் நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வெற்றி பெற்ற இத்திட்டத்தை  செட்டியாபத்து ஊராட்சியில் செயல்படுத்தி வரும் தலைவர் பாலமுருகன் மற்றும்  காடு வளர்ப்பு பணியாளர்களை அமைச்சர் பாராட்டினார். இதில் திமுக மாணவர் அணி மாநில துணைச் செயலாளர் உமரிசங்கர், நகர திமுக செயலாளர் ஜான்பாஸ்கர், நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் மகாவிஷ்ணு, மாவட்ட  துணை அமைப்பாளர்கள் வர்த்தக அணி ரவிராஜா, இளங்கோ, மாணவர் அணி அமிர்தா மகேந்திரன், ராஜா பிரபு இளைஞர் அணி ஜெயப்பிரகாஷ், விவசாய அணி சக்திவேல், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாய்ஸ், இளைஞர் அணி நகர அமைப்பாளர் அஜய், தொழிலதிபர் ராம்குமார், மால்ராஜேஷ், ஊராட்சி எழுத்தர் கணேசன், தேரியூர் அழகுவேல், மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், எள்ளுவிளை செயலாளர் மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Miyawaki ,Minister ,Anita Radhakrishnan ,
× RELATED விவசாயிகளுக்கு செயல்விளக்கம்