குருசாமிபாளையத்தில் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராசிபுரம், டிச.15: ராசிபுரம் அருகே குருசாமிபாளையத்தில் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ராசிபுரம் அருகே குருசாமிபாளையத்தில் மாவட்ட மனநல திட்டம் சார்பில், மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மனநல டாக்டர் ஜெயந்தி, மனநல ஆலோசகர் ரமேஷ், பள்ளி தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினர். முகாமில் மனநல மருத்துவர் ஜெயந்தி பேசுகையில், பயம்- பதற்றம் என்பது எல்லாவித நோய்களிலும் ஒரு அறிகுறியாக தோன்றினாலும் சில சமயம் அதுவே ஒரு தனி நோயாக மனிதனை ஆக்கிரமித்துக் கொள்கிறது. இதனால், அளவிற்கதிகமான பயமும், பதற்றமும் மன அழுத்தமும் ஏற்படுகின்றன. போதைப் பொருள் பழக்கம் போன்றவை மன நோயின் அறிகுறிகள், சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவழிப்பவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகும் என்றார்.நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: